1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (12:08 IST)

வினோதமான முறையில் அடிக்கப்பட்ட சிக்சர்: விவரம் உள்ளே

நியூசலாந்தில் நடைபெற்று வரும் உள்ளுர் கிரிக்கேட் போட்டி ஒன்றில் வினோதமான முறையில் ஒருசிக்சர் அடிக்கப்பட்டது.
 
போர்டு கோப்பைக்கான 3-வது இறுதிசுற்று ஆட்டத்தில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் பேட் செய்தது. 19-வது ஓவரில் ஜீத் ரவல் பேட் செய்ய, எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் பவுலிங் செய்தார்.
 
அப்போது ஜீத் ரவல் ’லாங்-ஆன்’ திசையில் ஒங்கி அடித்த பந்து பவுலர் ஆண்ட்ரூ எலிஸ் தலையில் பட்டு சிக்சராக மாறியது, இந்த பந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது.
 
இந்த சிக்சரை முதலில் நடுவர் பவுண்டரி என அறிவித்து, பின்பு சிக்சராக மாற்றினார். போட்டியின் முடிவில் ஆக்லாந்து அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.