வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2024 (07:05 IST)

விராட் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்த பாபர் ஆசம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் அவரை அடுத்த கோலி என்று ரசிகர்கள் புகழ்கின்றனர்.

இந்நிலையில் கோலி மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் டி 20 போட்டிகளில் படைத்திருந்த சாதனையை இப்போது பாபர் ஆசம் முறியடித்துள்ளார். டி 20 போட்டிகளில் 10000 ரன்களைக் கடந்துள்ளார், சர்வதேச டி 20 மற்றும் உள்ளூர் போட்டிகள் என சேர்த்து 271 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

கோலி இந்த மைல்கல்லை 299 இன்னிங்ஸ்களிலும், கிறிஸ் கெய்ல் 285 இன்னிங்ஸ்களிலும் எட்டியுள்ளனர்.