திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (14:31 IST)

உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும்.. அக்தர் கணிப்பு!

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த போட்டித் தொடரின் இறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத அதிக வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். இதை அவர் தனது யுடியூப் சேனலில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் அவர் கிரிக்கெட் விவாதங்களில் கலந்துகொண்டு வருகிறார்.