செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 28 அக்டோபர் 2023 (13:46 IST)

நியுசிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்த பேட்ஸ்மேன்கள்! இமாலய இலக்கை நோக்கி ஆஸி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் வகையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்  தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  இருவரும் முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தனர். வார்னர் 81 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அதன் பின்னர் வந்த வீரர்களும் அதிரடியில் இறங்க ஆஸி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இப்போது வரை 43 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்து விளையாடிவருகிறது. களத்தில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் 40 ரன்களோடு விளையாடி வருகிறார்.