செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 28 அக்டோபர் 2023 (10:41 IST)

டாஸ் வென்ற நியூசிலாந்து.. பேட்டிங் செய்யும் ஆஸ்திரேலியா.. இரு அணிகளில் என்ன மாற்றம்?

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் வகையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில்  தற்போது ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.  

ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கி விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று ஆறு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது

அதே போல் நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று ஒரே ஒரு தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் நியூசிலாந்துடன் சம புள்ளிகள் பெறும் என்பதும் அதே நேரத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்து எழுதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இன்றைய போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் விவரங்கள் பின்வருமாறு:

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், லாபுசாஞ்சே, ஜோஷ் இங்க்லிஷ், மேக்ஸ்வெல், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹாசில்வுட்

நியூசிலாந்து: கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், நீஷம், மிட்செல் சாண்ட்னர், ஹெண்ட்ரி, ஃபெர்குசன், ட்ரெண்ட் போல்ட்,

Edited by Mahendran