தொடர்புடைய செய்திகள்
- பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!
- லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!
- ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!
- சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!
- 3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..
ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!
ஆஸி அணி தற்போது டெஸ்ட் விளையாடும் அணிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்குக்கு இணையாக பவுலர்களும் நட்சத்திர அந்தஸ்து பெற்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளையும் வென்றது. அதற்கு அந்த அணி பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஐந்து பவுலர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும், ஹேசில்வுட் நான்காம் இடத்திலும், ஸ்காட் போலண்ட் ஆறாவது இடத்திலும், நாதன் லியான் எட்டாவது இடத்திலும் மிட்செல் ஸ்டார்க் பத்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.