ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர்: இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

I
Last Modified வெள்ளி, 8 ஜூன் 2018 (19:03 IST)
ஆசிய கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
 
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய 6 அணிகளும் மோதும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
 
இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியளில் முதல் இடத்தில் உள்ளது.
 
இந்நிலையில், இந்திய அணி நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :