ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (13:22 IST)

400 ரன்களை நெருங்கிய பாகிஸ்தான்: பாபர் அசாம் அபார சதம்!

baber
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணியை 400 ரன்களை நெருங்கிவிட்டது. 
 
சற்று முன் வரை பாகிஸ்தான் அணி 121 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 390 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்  மிக அபாரமாக விளையாடி 161 ரன்கள் எடுத்துள்ளார்
 
அதேபோல் சர்பாஸ் அகமது 86 ரன்களும் சல்மான் 70 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி மிக அபாரமாக 400 ரன்களை நெருங்கி உள்ளதை அடுத்து அந்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran