1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (11:13 IST)

சக வீரரின் காதலியோடு உல்லாசம்? வைரலாகும் பாபர் ஆசம் வீடியோ!

பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் ஆசம் சக வீரரின் காதலியோடு நெருக்கமாக இருப்பதாக வெளியாகியுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வருபவர் பாபர் ஆசம். பாகிஸ்தான் அணியின் ஒருநாள், டி20, டெஸ்ட் என அனைத்து வகையிலும் கேப்டனாக விளங்கும் பாபர் ஆசம் தலைமையில் கடந்த ஆண்டு உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் இறுதி போட்டி வரை சென்றது. மேலும் டி20 போட்டிகளில் உலகில் நம்பர் 1 பேட்ஸ்மேனாகவும் பாபர் ஆசம் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பாபர் ஆசம் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என சில சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள பெண் சக கிரிக்கெட் வீரரின் காதலி என்றும், அந்த வீரர் தொடர்ந்து அணியில் இடம்பெறுவதற்காக பாபர் ஆசமுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் ஆதாரம் இல்லாத பேச்சுகள் என்றும், போலியாக இவை உருவாக்கப்பட்டு அவரது நற்பெயரை கெடுக்க சிலரால் பரப்பிவிடப்பட்டுள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K