அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் முன்னிலை!

Last Updated: வெள்ளி, 15 ஜூன் 2018 (15:12 IST)
ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்த்தை வழங்கியுள்ளது ஐசிசி. அதன்படி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டுள்ளது. 
 
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
 
அடுத்து ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. போட்டியின் போது, அஸ்வின் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 
 
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் ஜாகீர் கானை பின்னுக்கு தள்ளி நான்வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 
ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுக்களுடன் 3 வது இடத்திலும், கபில்தேவ் 434 விக்கெட்டுக்களுடன் 2 வது இடத்திலும், 619 விக்கெட்டுக்களுடன் கும்ப்ளே முதல் இடத்திலும் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :