1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (17:00 IST)

தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி..வைரல் வீடியோ

vignesh shivan -dhoni
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும்  நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் முன்னாள் கேப்டன் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர், போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன்பின்னர்,  நானும் ரெளவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கூழாங்கல், நெற்றிக்கண் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.  கடந்தாண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகவிருந்த  நிலையில், இப்படம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், ‘லெட்ஸ் ஜெட் மேரிட்’ என்ற படத்தை தயாரித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ ரிலீஸில் கலந்து கொள்ள சென்னை வந்திருக்கிறார். இப்பட புரமோசனும் நடந்து வருகிறது.

இந்த  நிலையில், இன்று சென்னை கிங்ஸ் கேப்டன் தோனியிடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் அணிந்திருந்த பனியனில் ஆட்டோகிராஃப் வாங்கினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளதாவது: ''எனது கேப்டன் மற்றும் என்னுடையே ரோல் மாடல், நான் நேசிக்கும் ஒரு மனிதன் தோனி. அவரை ஒவ்வொரு முறை காண்கின்றபோதும் என் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''தோனி  எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இருந்து வெளியாகும் எல்லா படங்களுக்கும் எங்களின் அன்பும் ஆதரவும் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் ‘எல்.ஜி,எம் ‘படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.