வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (11:07 IST)

சொன்னப்படி செய்த ஆனந்த் மஹிந்திரா! நடராஜனுக்கு கார் பரிசு!

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் இந்தியா வெல்வதற்கு பெரும் உதவியாக இருந்த தமிழக வீரர் நடராஜனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் மூலமாக கவனம் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன் முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடினார். அவரது அசாதாரணமான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் பெரும் பங்காற்றிய நிலையில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த 6 இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு கார் பரிசளிப்பதாக மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழக வீரர் நடராஜனுக்கு மஹிந்திராவின் புதிய மாடலான தார் காரை பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.