1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (09:10 IST)

டிரஸ்ஸிங் ரூமில் சகோதரத்துவம்… இந்திய அணியின் வெற்றிக்கு இதுவே காரணம்!

இந்திய அணியின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பதை தமிழக வீரர் நடராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 48 ஓவர்களுக்கு 329 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி நடராஜன் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் கிரிக்கெட் உலகில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியிட்ட அவர் ‘இது ஒரு அருமையான விளையாட்டு. வரலாற்று சிறப்புமிக்க தொடரில் நானும் பங்களிப்பது பெருமையான விஷயம். ஓய்வறையில் நிலவும் சகோதரத்துவம், இறுதிவரை போராடும் விடா முயற்சியுமே வெற்றிக்குக் காரணம்’ எனக் கூறியுள்ளார்.