1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 3 டிசம்பர் 2022 (09:16 IST)

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அடித்த அடியை என்னால் பார்க்க முடியவில்லை- அக்தர் கவலை!

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் தற்போது டெஸ்ட் போட்டி தொடரை விளையாட சென்றுள்ளது.

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட்  போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி 657 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிலர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். காய்ச்சலில் இருக்கும்போதே இந்த அடி என்றால், காய்ச்சல் இல்லாமல் இருந்தால் என்ன ஆகி இருக்கும்… அந்த அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் டெஸ்ட் போட்டியாக இருந்தாலும், அதில் பொறுமையாக விளையாடுவதை விரும்பாதவர். எங்கள் பவுலர்கள் அப்படி அடி வாங்கியதை என்னால் கூட பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.