தொடர்புடைய செய்திகள்
- நான் ஒரு சிறந்த கேப்டனாக செயல்படவில்லை…. ரோஹித் ஷர்மா ஒப்புதல்!
- என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள காரணம் இதுதான்… ரோஹித் ஷர்மா பகிர்ந்த கருத்து!
- மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்க உள்ள நான்கு வீரர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!
- கோலி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… தினேஷ் கார்த்திக் அறிவுரை!
- தயவு செஞ்சு ரிவ்யூ எடுங்க.. கெஞ்சிய சர்பராஸ் கான்… வைரலாகும் புகைப்படம்!
சொந்த மண்ணில் வொயிட்வாஷ்… சச்சினுக்குப் பிறகு ரோஹித் படைத்த மோசமான சாதனை!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று டெஸ்ட்களையும் தோற்று இந்திய அணி வொயிட்வாஷ் ஆனது. இன்று நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும் இந்திய அணி கோட்டை விட்டு முதல் முறையாக நியுசிலாந்து அணியிடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது.
இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. இந்த வொயிட்வாஷ் தோல்விக்குப் பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா கேப்டனாக தான் சரியாக செயல்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியுள்ளார்.
இந்திய அணி கடைசியாக 2000 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்க அணியிடம் வொயிட்வாஷ் ஆகியிருந்தது. அந்த தொடருக்கு சச்சின் கேப்டனாக இருந்தார். அதன் பிறகு 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி நியுசிலாந்திடம் வொயிட்வாஷ் ஆகியுள்ளது. சச்சினுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வொயிட்வாஷ் ஆன கேப்டன் என்ற மோசமான சோதனையை ரோஹித் படைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்