வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (16:51 IST)

ஒரு நொடியில் 150 திரைப்படங்கள் டவுன்லோடு.. அதிவேக இண்டர்நெட்டை அறிமுகம் செய்த சீனா..!

இந்தியாவில் தற்போது தான் 5ஜி இன்டர்நெட் என்ற அதிவேக இன்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் சீனாவில் 150  எச்டி திரைப்படங்களை ஒரு நொடியில் பதிவிறக்கம் செய்யும் அதிவேக 1200 ஜிகாபைட் அளவிற்கு அதிவேக இன்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

இன்டர்நெட் சேவை என்பது இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் தற்போது வழங்கப்பட்டு வந்தாலும் ஒரு சில நாடுகளில் மட்டுமே அதுவே இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிவேக இன்டர்நெட் சேவை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் தற்போது தான் 5ஜி என்ற இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டு வருகிறது என்பதும் அமெரிக்காவை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனாவின் ஹவாய் டெக்னாலஜி சென்ற நிறுவனம் உலகின் அதி விரைவான இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு நொடிக்கு 1500 ஜிகாபைட் அளவிற்கு அதிவேக இணைய சேவையை பெற முடியும். சுருக்கமாக சொல்வது என்றால் 150 எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் டவுன்லோட் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran