வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 27 ஜூன் 2024 (08:16 IST)

கஷ்டப்பட்டு அரையிறுதி வந்து இப்படி சொதப்பிட்டாங்களே.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆப்கன்!

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி சூப்பர் 8 போட்டி சந்தேகமே இல்லாமல் இந்த உலகக் கோப்பை தொடரின் திர்ல்லான போட்டி என்று சொல்லலாம். அந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் உலகக் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன்பக்கம் இழுத்தது. முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும் அந்த அணிக்கு பல நாட்டு வீரர்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கூறிவந்தனர்.

இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான இலக்கை நிர்ணயித்துள்ளது. இதையடுத்து ஆடிவரும் தென்னாப்பிரிக்கா 35 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 21 ரன்களே தேவை என்பதால் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும்.