திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 15 அக்டோபர் 2022 (16:26 IST)

“இந்திய அணி அரையிறுதிக்கு செல்லுமா?... சில பிரச்சனைகள்…” ஆகாஷ் சோப்ரா கருத்து!

இன்னும் சில நாட்களில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பல வீரர்கள் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எந்த அணிகளாக இருக்கும் என தங்கள் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது கணிப்பில் இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றுதான் அரையிறுதிக்கு முன்னேறும் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் கண்டிப்பாக அரையிறுதிக்கு செல்லும் என கணித்துள்ளார்.

இந்திய அணியில் இருக்கும் சில பின்னடைவுகளை சரிசெய்தால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் என்று அவர் கூறியுள்ளார்.