தொடர்புடைய செய்திகள்
- “தினேஷ் கார்த்தியை எந்த இடத்தில் இறக்குவார்கள்…” மூத்த வீரர் ஸ்ரீகாந்த் கேள்வி
- ஆசியக் கோப்பை தொடரில் இருந்து விலகும் முன்னணி வீரர்… இந்தியாவுக்கு பின்னடைவு
- “கே எல் ராகுல் இல்லாததால் கோலி இடம் மாற்றப்படலாம்…” முன்னாள் வீரர் கருத்து!
- ஆசியக் கோப்பை தொடர்… மூன்று முறை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்பு!
- “இந்திய அணியில் கோலியின் இடம் அவர்கள் கையில்தான் உள்ளது..” கைவிரிக்கிறதா பிசிசிஐ?
“முகமது ஷமியை ஏன் எடுக்கவில்லை… அவரின் அனுபவம்…” வர்ணனையாளர் விமர்சனம்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும் பவுலிங் கூட்டணி பலவீனமாக உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
அதே போல மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியும் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படுவதில்லை. இந்நிலையில் முகமது ஷமியை ஏன் தேர்வு செய்யவில்லை என முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் “ஷமியின் அனுபவம் அணிக்கு பலனளித்திருக்கும். ஆசியக் கோப்பை நடக்க உள்ள மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் நாமோ வெறும் 3 வேகப்பந்து வீச்சாளர்களோடு செல்கிறோம்” எனக் கூறியுள்ளார்.