தொடர்புடைய செய்திகள்
- ''பேசியது போதும்... செயலில் இறங்குங்கள்''- புளூ சட்டை மாறன்
- ஒவ்வொரு சீரிஸ்க்கு முன்னாடியும் கோலியோடு டிஸ்கஸ் பண்ணுவேன்.. ரோஹித் ஷர்மா தகவல்!
- இந்தியா – பாகிஸ்தான் போட்டி; மழை பெய்தாலும் போட்டி உண்டு!? – ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விதிவிலக்கு!
- நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்! – அதிர்ச்சியில் திரையுலகம்!
- இந்தியாவுக்கு எதிராக 100 சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்… பாகிஸ்தான் கேப்டன் நம்பிக்கை!
உலகக் கோப்பையில் கோலியின் ஆட்டத்தைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை… முன்னாள் வீரர் கருத்து!
கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய ஆட்டத்திறனில் சோடையாக காணப்பட்டு வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு அதை மீட்டெடுத்தார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணிக்காக அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தார்.
அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 53 பந்துகளில் 83 ரன்கள் சேர்த்து விளையாடிய அவரின் இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான இன்னிங்ஸாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் இக்கட்டமான ஒரு நிலைமையின் போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசினார்.
அதிலிருந்து கோலி ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்க, வரும் உலகக் கோப்பை தொடரில் அவரின் பங்களிப்பை இந்திய அணி மிகவும் நம்பியுள்ளது. இந்நிலையில் கோலியின் நெருங்கிய நண்பரும் முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனுமான டிவில்லியர்ஸ் கோலி “கோலி உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்காக சிறப்பான விஷயங்களை செய்யப் போவதைக் காண என்னால் காத்திருக்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்