செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (16:31 IST)

1000 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைப்பாரா ஆண்டர்சன்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜிம்மி ஆண்டர்சன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 1000 விக்கெட்கள் வீழ்த்த இன்னும் 8 விக்கெட்களே தேவை.

தற்போது விளையாடிவரும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்பவர் ஜேம்ஸ் ஆனடர்சன். அதுபோலவே டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மெக்ரத்தின் சாதனையையும் அவர் கடந்த ஆண்டு தகர்த்தார். இந்நிலையில் இன்னும் 8 விக்கெட்கள் மட்டும் எடுத்தால் முதல்தரப் போட்டிகளில் மொத்தம் 1000 விக்கெட்கள் என்ற சாதனையை அவர் நிகழ்த்துவார். இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் ஆண்ட்ரு கேடிக் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.