ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (17:08 IST)

6 யூடியூப் சேனல்களுக்கு தடை - மத்திய அரசு அதிரடி

நாட்டில் போலி செய்திகள் ஒளிபரப்பியதாக 6யூடியூப் சேனல்களுக்கு  மத்திய அரசுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு  நாட்டின் பாதுகாப்பிற்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த நிலையில்,  நாடாளுமன்றம்,  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர்,  திரெளபதி முர்மு, ஓட்டிப் பதிவு இயந்திரங்கள் பற்றிய போலி செய்திகள் ஒளிபரப்பியதாக 6யூடியூப் சேங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேனல்கள் எடுத்துக் கொண்ட செய்திகளின்  உண்மைத்தனை பற்றி  விசாரணை நடத்தப்பட்டதில், அந்தச்   செய்திகள் அனைத்தும் போலி என்பது உறுதியானது.

எனவே, மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம்,  நேசன் டிவி சம்வத், சரோகர் பாரத், நேசன் 24, ஸ்வர்ணிம் பாரத், சமாச்சார் ஆகிய 6 யூடியூப் சேனகளுக்கு தடை விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த யூடியூப் சேனல்களில் 2 லட்சம் சந்தாதார்களும் இந்த 51 கோடி பார்வையாளர்களை கொண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.