1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2022 (15:37 IST)

நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனைக்கு தடை! – மத்திய அரசு அதிரடி!

இந்தியா முழுவதும், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்  பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ள நிலையில் அவை குப்பைகளாக மாறும்போது நிர்வகிப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளது. இதனால் நாடு முழுவதும் நீர்நிலைகள் உட்பட இயற்கை ஆதாரங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் மோசமடைந்து வருகின்றன.

இதனால் நாடு முழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களுக்கு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்த பிளாஸ்டிக் பைகளை இறக்குமதி செய்யவும், விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.