செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (09:54 IST)

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடு! – மத்திய அரசு அதிரடி!

WhatsApp
இணைய வழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

இந்தியா முழுவதும் இணைய சேவை வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஆடியோ, வீடியோ கால்களுக்கும் மக்கள் தற்போது இணையவழி சேவையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இணையவழி ஆடியோ, வீடியோ கால் அழைப்புகளுக்கு வாட்ஸப், ஸ்கைப், ஜூம் உள்ளிட்ட செயலிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் புதிதாக தொலைத்தொடர்பு மசோதா 2022 – ஐ உருவாக்கி வருகிறது. இந்த புதிய மசோதாவில் ஓடிடி மற்றும் அனைத்து இணைய வழி சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி இணையவழி கால் வசதிகளை வழங்கும் செயலிகள் மத்திய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிகள் சேவைகளுக்கான உரிமம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவு கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.