ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் தொடர் இன்று தொடக்கம்

a
Last Modified புதன், 13 ஜூன் 2018 (13:23 IST)
லண்டனில் இன்று ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

 
 
இங்கிலாந்துக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு லண்டனில் தொடங்குகிறது.
 
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைபெற்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் இல்லாமல் அந்த அணி இந்த தொடரில் களமிறங்வுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு டிம் பெயின் கேப்டனாக செயல்படவுள்ளார்.
a
 
இரு தரப்பு அணிகள் விவரம்:
 
ஆஸ்திரேலிய அணி: டிம் பெயின்( கேப்டன்), ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், நாதன் லியோன், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஷ்ரிச் ஷர்ட், ஜேன் ரிச்சர்ட்சன், கேன் ரிச்சர்ட்சன், டி ஆர்சி ஷோர்டிஸ், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆண்ட்ரூ டை, மைக்கேல் நேசர்
 
இங்கிலாந்து அணி: மோர்கன் ( கேப்டன்), மோயீன் அலி, பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளன்கெட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், டேவிட் வில்லி, மார்க் வூட், சாம் பில்லிங்ஸ், ஜேக் பால்இதில் மேலும் படிக்கவும் :