புல்லாங்குழலுடன் களமிறங்கிய தவான்

p
Last Modified செவ்வாய், 19 ஜூன் 2018 (17:55 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
இந்திய அணியின் இடதுகை துவக்க வீரரான ஷிகர் தவான். டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என அனைத்து தரப்பு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். இதனால் ரசிகர்கள் தவானை செல்லமாக கப்பார் என்று அழைப்பார்கள்.
 
இவர் கடந்த 3 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிப்பதற்கு பயற்சி பெற்று தனது இசை திறைமயை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், வணக்கம். நான் என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றை பகிர ஆசைப்படுகிறேன், என்னுடைய இன்னொரு முகத்தை காட்ட விரும்புகிறேன். கடந்த 3 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க கற்றுகொள்கிறேன். எனது குரு வேனுகோபால்ஜியிடம் கற்றுக்கொண்டதற்கு பெருமைப்படுகிறேன். இது என் முதல் முயற்சி, இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
மேலும், அவர் தான் புல்லாங்குழல் வாசிக்கும் வீடியோவையும் அந்த பதிவில் இணைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தி வைரலாகி வருகிறது.
இதில் மேலும் படிக்கவும் :