செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (22:28 IST)

குழந்தைகளை பார்க்க 15 ஆயிரம் மைல்கள் பறந்து சென்ற ஷிகர் தவான்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், விரைவில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க தவான் அங்கு சென்றுள்ளார்.

தனது வருகையை தெரியப்படுத்தாமல் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆச்சரியமளித்த தவான், இந்த சந்தோஷத்தை பார்ப்பதற்காகத்தான் 15 ஆயிரம் மைல்கள் பறந்து வந்ததாக கூறியுள்ளார்.

ஷிகர் தவானின் மனைவி ஆயிஷா அவரை விட 10 வயது அதிகமானவர். மேலும் இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் ஃபேஸ்புக் நட்பின் மூலம் தவானுடன் அறிமுகமாகி பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது மூன்று குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஆயிஷாவை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தவான் சென்று பார்த்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.