ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கொரோனா வைரஸ்
Written By Sasikala

கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகளாக கூறப்படுபவை....?

கொரோனா வைரஸ் முதலில் சீன நகரமான வுஹானில் ஒரு மொத்த கடல் உணவு சந்தையில் இருந்து பரவத் தொடங்கியதாக கருதப்படுகிறது. இது முதலில் டிசம்பர் பிற்பகுதியில் வெளி உலகிற்கு தெரிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் ஜலதோஷம் ஏற்படுத்தும் வைரஸ்களைப் போலவே பரவுகிறது. இருமல், தும்மல் அல்லது பாதிக்கப்பட்ட பகுதியைத் தொடுவதன் மூலம் வைரஸ் பரவுகிறது. எல்லோரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பிருந்தாலும், சிறு குழந்தைகள் இந்த வைரஸின் அதிகபட்ச ஆபத்தில் உள்ளனர்.
 
கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறிகள்:
 
மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பிற, மேல் சுவாச நோய்த்தொற்றுகளை போலவே கொரோனா அறிகுறியும் ஒத்திருக்கின்றன. எனவே வைரஸை அடையாளம் காண்பது சற்று கடினமானதாக உள்ளது. 
 
இருமல் மர்றும் சளி போன்ற வழக்கமான அறிகுறியாக இருந்தாலும், காய்ச்சல் நீடித்தால் தாமதிக்காதீர். நீங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா  என்பதை அடையாளம் காண உடனடியாக ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
 
உலக சுகாதர நிறுவனத்தின் அறிவுறுதலின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, விலங்குகளிடமிருந்து குறிப்பிட்ட  இந்த வைரஸ் தோன்றியதால் பாட்துகாப்பற்ற வகையில் பராமரிக்கப்படும் விலங்குகளுடனான தொடர்பைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுள்ளது.
 
கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இறைச்சி பயன்படுத்துவோர், நன்கு சமைத்த இறைச்சி பொருட்களை மட்டுமே உட்கொள்ள  அறிவுறுத்தப்பட்டுள்ளது.