கிளாமர் லுக் ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய போட்டோஷூட்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
சின்னத்திரையில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த அவர், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
அட்டகத்தி, ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை, கனா, உங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி அடையாளத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதன்பிறகு தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், வட சென்னை திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார். இதுபோன்ற பல படங்களில் தனது நடிப்புத் திறமையை நிரூபித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வழக்கமாக எளிமையான மற்றும் ஹோம்லியான தோற்றத்தில் அதிகம் பார்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த புதிய போட்டோஷூட்டில் சற்று வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்துள்ளார்.
லைட் ப்ளூ நிற சட்டையில் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.

