பல வருட போராட்டம்.. இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி!.. ரிஷிகாந்த் ஃபீலிங்...
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக இவர் நல்ல வாய்ப்புக்காக போராடி வந்தவர் ரிஷிகாந்த். சில குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான முதல் ராத்திரி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
குறுகிய பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பாராட்டை பெற்றதோடு, நல்ல வசூலை பெற்று ஒரு சூப்பர் ஹிட் படமாகவும் மாறியது. எனவே, கவனிக்கத்தக்க நடிகராக ரிஷிகாந்து, கவனிக்கத்தக்க இயக்குனராக ராஜா கருப்பசாமியும் மாறியிருக்கிறார்கள்..
மொத ராத்திரி படம் வெளியாகி சில நாட்களிலேயே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சனந்த்தோடு இணைந்து ரிஷிகாந்த் நடித்த டோரதி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக திருநங்கைகளிடம் இந்த படம் பெரிய வரவேற்பையும், பாராட்டையும் பெற்றிருக்கிறது. ஒந்த படத்தையும் பல பெரிய இயக்குனர்கள் பாராட்டினார்கள். குறிப்பாக, டோரதி படத்தில் நடித்த சனந்த் மற்றும் ரிஷிகாந்த் நடிப்பை பல இயக்குனர்கள் பாராட்டியிருக்கிறார்கள்..
இந்நிலையில், தனது சமூகவலைத்தள பக்கங்களில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ரிஷிகாந்த் பல வருட காத்திருப்புகள், எண்ணற்ற போராட்டங்கள், ஏமாற்றங்கள், வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள். இன்னும் எவ்வளவு காலம் இந்த பயணம்? என்னை எங்கு அழைத்து செல்லும் என்று நான் என்னையே கேட்டுக் கொண்ட தருணங்கள் உண்டு.. ஆனால் இன்று நீங்கள் என் மீது பொழிந்து கொண்டிருக்கும் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாக சொல்லி விடுவது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.. நன்றி.. என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்..