1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஜூலை 2021 (13:00 IST)

செப்டம்பர் மாதம் முதல் 3வது டோஸ் தடுப்பூசி!

வருகிற செப்டம்பர் மாதம் முதல், பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக தகவல். 

 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18.29 கோடியாக அதிகரித்துள்ளது. 
 
குளிர்காலம் தொடங்க உள்ளதால் வழக்கமாக காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். இதனால் சாதாரண காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும், மூன்றாவது டோஸ் தடுப்பூசியை போட பிரிட்டனில் உத்தரவிடப்பட்டுள்ளது.