1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Sasikala

குழந்தை வளர்ப்பு பற்றிய பயனுள்ள குறிப்புகள் !

கைக்குழந்தைகள் திட உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போது, மரத்தினால் ஆன ஐஸ்கிரீம் ஸ்டிக்கினால் எடுத்து ஊட்டினால் நமக்கும் ஊட்டுவது எளிது, குழந்தைக்கும்  சாப்பிட எளிது.

சிறு குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், காய்ந்த திராட்சை 10 போட்டுக் கொதிக்க வைத்து, கசக்கி பிழிந்து, வடிகட்டி கொடுத்தால் பலூனில் காற்று இறங்குவது போன்று இறங்கிவிடும்.
 
குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால், சுக்கு தட்டிப்போட்ட வெந்நீரில் சர்க்கரை கலந்து வெதுவெதுப்பாகக் கொடுத்தால், வாயு கலைந்து வெளிப் போக்கு ஆகி சரியாகிவிடும்.
 
பச்சிளங்குழந்தைகளுக்கு ஜலதோஷம் வந்தால் நீளமான முழு மஞ்சள் ஓன்றை எடுத்து, ஒரு முனையில் கருப்பாகச் சுட்டு, சிறிது சுண்ணாம்புடன் விழுதாக தயாரிக்கவும். கரண்டியில் இந்த விழுதை லேசாக சுடவைத்து மிதமான சூட்டில் குழந்தையின் மூக்கு மற்ற்றும் நெற்றியில் தடவினால் ஜலதோஷம் பறந்து  போய்விடும்.
 
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்ட வேண்டும். எளிதாகவும், சுத்தமாகவும் வேலை முடியும்.
 
குழந்தைகளுக்குத் தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்து சாப்பிட கொடுக்கலாம். பசும்பாலைவிட அதிகச்சத்து வாய்ந்தது.
 
சிறு குழந்தைகளை அருகில் வைத்துக் கொண்டு தரையை கூட்டிப் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல்,  இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் பாதிக்கும்.