சில தவிர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்...!!

பெற்றோர்கள் குழந்தை உணவை தான் சாப்பிடுவதில்லை, இதையாவது சாப்பிடட்டும் என்று குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத் தீனிகளை வாங்கி தருகின்றனர். இதனால் குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டே, கூடவே உடல் எடையையும்  அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர். 
சில நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர். அதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி பார்ப்போம்.
 
சீட்டோஸ் எனப்படும் சில்லுகள் பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால், அதை நாம் வாங்கிக்  கொடுத்துவிடுகிறோம். இதை உண்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய், ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி எனும் அதிகப்படியான செயல்பாடு, ஒவ்வாமை  போன்றவை ஏற்படுகின்றன.
 
மைக்ரோவேவ் பாப்கார்ன் இவை வேதிப்பொருட்களை பயன்படுத்தியும், எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது.
பேக்கட்டுகளில் அடைத்து விற்கப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது. இவை குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்.
 
குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கின்றன. இதனால் பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய்  போன்றவையும் ஏற்படுகின்றன.
 
பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை  நிலைகுலைய செய்கின்றன.
 
இது தவிர குழந்தைகளுக்கு பிரபல சிக்கன், நூடுல்ஸ் போன்றவற்றை அளிக்காதீர்கள். இது உங்கள் குழந்தைகளின் உயிர் சம்பந்தப்பட்ட  விஷயம். எனவே அவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்தி, ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதே சிறந்ததாகும்.


இதில் மேலும் படிக்கவும் :