திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 நவம்பர் 2020 (11:39 IST)

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்தநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் காந்தியின் சீடராகவும் அறியப்பட்ட நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை தொடர்ந்து அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் நேருதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் ராகுல்காந்தி, மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.