திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (17:35 IST)

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மனைவி மறைவு- அரசியல் தலைவர்கள் இரங்கல்

jegath wife
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்களின் மனைவியார் அனுசியா என்பவர் திடீரென காலமானார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
ஜெகத்ரட்சகன் அவர்களின் மனைவியார் அனுசியா காலமானது குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் ’முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் அவர்களின் துணைவியார் அனுசியா அவர்கள் மறைவு செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது
 
துணைவியாரை இழந்து வாடும் ஜெகத்ரட்சகன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். மேலும் திமுக அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் ஜெகத்ரட்சகன் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது