திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 25 ஏப்ரல் 2020 (18:51 IST)

ஊரடங்கில் உழைக்கும் டிராஃபிக் போலீசாருக்கு உதவி செய்த நடிகர் யோகி பாபு!

இதுவரை யாரும் யோசிக்காத வகையில் டிராஃபிக் போலீசாருக்கும் சட்ட ஒழுங்கு  போலீசாருக்கும் உதவிசெய்து அசத்திய நடிகர் யோகி பாபுக்கு குவியும் பாராட்டு.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தக் கொடிய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வருகிற மே3ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கஷ்டத்தில் இருக்கும் இருக்கும் மக்களுக்கு பல்வேறு பிரபலங்கள் , தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை களத்தில் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பற்ற 24 மணி நேரமும் தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் தங்கள் குடும்பங்களை விடுவிடு உழைத்துக் கொண்டிருக்கும்  டிராஃபிக் போலீசாருக்கும் சட்ட ஒழுங்கு  போலீசாருக்கும் நடிகர் யோகி பாபு  என்95 மாஸ்க் மற்றும் எனெர்ஜி பானங்களை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளார். யோகி பாபுவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.