வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (10:08 IST)

ஐஸ்வர்யா ராய் குணமடைய பிரார்த்தனை செய்யும் முன்னாள் காதலர்!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி முதலில் வெளியானது.

பின்னர் சில மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் எடுக்கப்பட்ட இரண்டாம் கட்ட பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் அமிதாப், அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கும் கொரோனா நோய் தொற்று இருப்பதை அறிந்த அனைவரும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களின் முன்னாள் காதலரும் நடிகருமான விவேக் ஓப்ராய் ட்விட்டரில் ஐஸ்வர்யா ராய் புகைப்படத்துடன் வந்துள்ள செய்தியை டேக் செய்து, " உங்களின் குடும்பத்தினர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ட்விட் செய்துள்ளார்." நடிகர் விவேக் ஓபராய் தமிழில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக விவேகம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.