திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 22 ஜூலை 2020 (08:18 IST)

"ஓ மை கடவுளே".... மீண்டும் கடவுள் ஆகிறார் விஜய் சேதுபதி!

அஸ்வத் மாரிமுத்து இயக்கி அசோக் செல்வன் நடித்திருந்த "ஓ மை கடவுளே" படம் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போட்டது. இப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க வாணி போஜன் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். மேலும் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்தார்.

சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் அசோக் செல்வன் - ரித்திகா சிங் பின்னர் திருமணம் செய்துகொள்ளும் போது அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் கதை யதார்த்தமாக இருந்ததால் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரித்த இப்படம் பிரண்ட்ஷிப், காதல் கல்யாணம் , காமெடி என அத்தனை அம்சங்களும் கலந்திருந்ததால் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

கோலிவுட்டில் மெகா ஹிட் அடித்த இந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என மூன்று மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர். இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கடவுளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



தெலுங்கு நடிகர் விஸ்வக் சென் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை குறித்து நடிகர் மகேஷ் பாபு சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஓ மை கடவுளே சூப்பர்... இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி நேர்த்தியாக உள்ளது. இயக்குநர் அஷ்வத் அருமையா பண்ணியிருக்கீங்க, அசோக் செல்வன் நீங்க நேச்சுரலான நடிகர்" என படத்தை வெகுவாக பாராட்டியாது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விஜய் சேதுபதி உப்பண்ணா என்ற தெலுங்கு படத்தில் வில்லன் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.