செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (16:48 IST)

அந்த இயக்குனரின் பாணியை மட்டும் புரிந்து கொள்ளவே முடியவில்லை –விஜய் சேதுபதியை வியக்க வைத்தவர் யார்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைய ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் ஹிட் நாயகனாக பரிணமிக்க ஆரம்பித்த நிலையில் சூதுகவ்வும் படத்தின் வெற்றின் அவரை தவிர்க்க முடியாத கதாநாயகர்களின் பட்டியலில் வைத்தது. அதன் பின்னர் அவர் அடைந்த வெற்றி அனைவரையும் வியக்க வைக்கும் அளவிலானது.

இந்நிலையில் சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களில் தன்னை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படுவதாக அவரிடமே தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. இரண்டு படங்களில் அவருடன் நடித்திருந்தாலும் அவரது பாணியை புரிந்து கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

201 5 ஆம் ஆண்டுக்குப் பின் எந்த படத்தையும் இயக்காத நலன் குமாரசாமி இப்போது ஸ்டுடியோ க்ரின் நிறுவனத்துக்காக கதை ஒன்றை எழுதியுள்ளார்.