"என்னுடன் ராபர்ட் அப்படி இருந்தான், எங்கள் காதலின் அடையாளம் அந்த டாட்டூ"?

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (15:46 IST)
டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடனான தனது உறவு உண்மைதான் என வனிதா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


 
தந்தை விஜய்குமாருடன் சொத்து பிரச்னையில் சண்டையிட்டு சர்ச்சைக்குள்ளான வனிதாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்னர் நிகழ்ச்சிக்கு சென்று இன்னும் தனது பெயரை கெடுத்துக்கொண்ட வனிதாவை மக்கள் முழுமையாக வெறுத்தனர். இதனால் அவர் எவிக்ஷனில் இருந்து வெளியேற்றப்பட்டார். 
 
இதற்கிடையில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடன இயக்குனர் ராபர்ட் தங்களுக்கு இடையேயான உறவை பற்றி பிரபல தனியார் ஊடகமொன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், வனிதாவின் தயாரிப்பில் தான் இயக்கிய எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தின்போது இருவரும் நெருங்கிப் பழக தொடங்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
 
இந்நிலையில் தற்போது இந்த தகவலை வனிதா மறுத்துள்ளார்,  ''ராபர்ட் எனது 3வது கணவர் எனக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை. எங்களுக்குள் ஒருவிதமான உறவு சில காலம் இருந்தது உண்மைதான். ஆனால், பின்னர் ஏற்பட்ட சில காரணங்களால் பிரிந்துவிட்டோம்.
 
சமீபநாட்களாக, எனது பெயரை ராபர்ட்  கையில் பச்சை குத்தியதை குறித்து கூறி வருகின்றனர். அது அவரது தனிப்பட்ட விஷயம், ஒருவேளை தன்னை பிரபலப்படுத்துவதற்காக கூட இப்படி செய்திருக்கலாம் என்று கூறி கடிந்து கொண்டார் வனிதா. 


இதில் மேலும் படிக்கவும் :