பிக்பாஸில் இரவு நேரங்களில் இப்படி ஒரு மோசமான சம்பவங்கள் நடக்கிறதா! -ஆதங்கத்தை கொட்டிய வனிதா!

Last Updated: புதன், 17 ஜூலை 2019 (15:36 IST)
பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்கா என பட்டத்தை பெற்ற வனிதா பலருடன் கத்தி கத்தி சண்டையிட்டதால் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பொதுவாக பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை பேட்டியெடுக்க மீடியாக்கள் முந்தியடித்து செல்வார்கள். ஆனால் வனிதா வெளியில் வந்து 4 நாட்கள் ஆகியும் யாரும் நேர்காணல் எடுக்கவில்லை.


 
இதனால் வனிதா தான் பட்ட அவமானத்தால் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை என கருதிய நேரத்தில் இன்று பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இரவு நேரங்களில் லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள், பின்னர்  ஒரு சில நிமிடங்களில் மீண்டும் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் துங்கவிடும் இதை என்னால் ஆரம்பித்தில் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை பின்னர் போக போக பழகிவிட்டது என பிக்பாஸில் நடக்கும் ரகசியத்தை கூறியுள்ளார் வனிதா.


இதில் மேலும் படிக்கவும் :