வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 ஜூலை 2019 (16:17 IST)

செத்தாண்டா கவின்...! கோர்த்துவிட்ட லொஸ்லியா கடுப்பான மீராமிதுன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் லொஸ்லியா கவினை கோர்த்துவிட மீரா மிதுனுக்கும் கவினுக்கும் சண்டை முட்டியுள்ளது. 


 
மீரா மிதுன் தலைமையிலான நீயா நானா நிகழ்ச்சியில் லொஸ்லியா கவினை பற்றி மறைமுகமாக ஒரு விஷயத்தை முன்வைக்கிறார். அதாவது, பிரண்ட்ஸ் னு சொல்லுறாங்க ஆனால் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு மாதிரி நடந்துகொள்கிறார்கள். அது நேற்று தான் தெரியவந்தது. அவரின் சம்மந்தப்பட்டவர்களிடம், நேரடியாக சென்று நான் உங்களுடன் நட்பாகத்தான் பழகுகிறேன், நான் உங்களை காதலிக்குறேன் என என்னவாக இருந்தாலும் தயவுசெய்து சொல்லிவிட்டால் இவ்வளவு பிரச்சனை வராது என லொஸ்லியா சொல்லி முடிப்பதற்குள், கவின் குறுக்கிட்டு நான் செய்தது தப்பு தான் என்று கூறுகிறார்.
 
உடனே நிகழ்ச்சியின் நடுவராக மீரா,  நீங்கள் தப்பா இல்லையா என்பதை நான் ஜட்ஜ் பண்ணவேண்டும் என சொல்ல உடனே கவின் எழுந்து என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில்  காதலை விட நட்பு தான் முக்கியம் என்றவாறு சமாளிக்க சாக்ஷியும் கவினை மடக்கி கேள்வி கேட்கிறார்.
 
இப்படி ஆளாளுக்கு கவினை ரவுண்டு கட்டியதால் கடுப்பாகி வெளியே சென்றுவிடுகிறார்.