ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By siva
Last Updated : திங்கள், 25 அக்டோபர் 2021 (17:35 IST)

சூர்யாவின் ‘ஜெய்ம்பீம்’ படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ்

சூர்யா நடிப்பில் ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெய்பீம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இளங்காற்று என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் பாடலை பிரதீப் குமார் என்பவர் பாடியுள்ளார்/ சீன் ரோல்டன் இசையில் உருவாகிய இந்த பாடலை யுகபாரதி ராஜூமுருகன் மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது 
 
இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.