1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 23 அக்டோபர் 2021 (13:19 IST)

நம்பர் 1 ட்ரெண்டிங்... சென்சேஷனல் ஹிட் அடித்த செல்லம்மா வீடியோ பாடல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லமா வீடியோ யூடியூபில் வெளியாகி நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 
 
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் சிலாகித்து பேசப்பட்டாலும், ஆடியோவில் ஹிட் ஆன செல்லம்மா பாடல் படத்தின் இறுதியில் வைக்கப்பட்டதால் ரசிகர்களால் முழுமையாக அந்த பாடலை பார்க்கமுடியவில்லை என்று கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் வீடியோ பாடல் யூடியூபில் வெளியாகி நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனின் நடனம் பலராலும் வெகுவாக ரசிக்க ரசிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.