1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
  4. sivkarthikeyan fight with vijay

போட்டி வேணானு ஒதுங்கிய அஜித்! ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. சூடுபிடிக்கும் விஜயுடனான மோதல்

ஜனநாயகன்
கோடம்பாக்கமே இப்போது பரபரப்பாகத்தான் இருக்கிறது. ஜனநாயகன் திரைப்படமும் பராசக்தி திரைப்படமும் பொங்கலுக்கு ஒன்றாக ரிலீஸ் ஆக இருப்பதால் அது ஒரு பெரிய பேசு பொருளாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அப்போதெல்லாம் இல்லாத ஒரு பரபரப்பு இப்போது மட்டும் இருப்பதற்கு என்ன காரணம் என்பதையும் யோசிக்க வேண்டும்.
 
விஜய் அரசியலுக்குள் நுழைந்து விட்டார். அதன் பிறகு வெளியாகும் திரைப்படம் ஜனநாயகன். இன்னொரு பக்கம் விஜய்க்கு எதிராக இங்கு சில பெரிய நடிகர்களை கொம்பு சீவி விட வேண்டும் என்பதற்காக உதயநிதி தரப்பிலிருந்து சில விஷயங்கள் செய்யப்படுவதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. அதனால் அதற்கு பகடுக்காயாக மாறுகிறாரா சிவகார்த்திகேயன் என்ற வகையிலும் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தோடு பராசக்தி திரைப்படத்தை மோத விட வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் சிவகார்த்திகேயனுக்கு எந்த ஒரு ஆசையும் இல்லை. அது முழுக்க முழுக்க தயாரிப்பாளர் கையில் மட்டும்தான் இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து இந்த மோதல் இப்போது வேண்டாம். இது விஜய்க்கு கடைசி படம். அதனால் எப்பவும் போல வசூல் ரீதியாக அவர் கடைசி படத்தோடு நல்ல வசூலை கொடுத்து விட்டு போகட்டும் என்று சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் தரப்பிற்கு ஒரு சிறு அறிவுரை மாதிரியாக கூறி இருக்கலாம்.
 
ஆனால் அதை சிவகார்த்திகேயன் செய்யவில்லை. விஜய்க்கு கடைசி படமாக இருந்தாலும் அந்த படத்தோடு என்னுடைய படம் மோதி அவரை நான் பீட் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சிவகார்த்திகேயன் அமைதியாக இருக்கிறாரா என்றெல்லாம் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இப்படி ஒரு மோதலை இன்னும் வளர விட வேண்டாம். அஜித் மாதிரி விஜய்க்கு நான் நல்லதையே நினைக்கிறேன் என்று ஒரு பேட்டியில் அஜித் கூறியிருப்பார். அதை ஏன் அவர் சொன்னார்? முன்பு அஜித் பேசிய ஒரு பேட்டி விஜய்க்கு எதிராக சித்தரிக்கப்படுவதை உணர்ந்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று எண்ணி தான் அடுத்த பேட்டியில் விஜய்க்கு நான் நல்லதையே நினைக்கிறேன் எனக் கூறியிருந்தார்.
 
 அதன் பிறகு அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அந்தப் போட்டியை தவிர்த்தனர். அப்படி சிவகார்த்திகேயன் ஒரு ட்விட் போட்டால் போதும். அண்ணனுக்கு இது கடைசி படம். அவர் படத்தோடு என் படமும் வருகிறது. எனக்கு மகிழ்ச்சி. அவருடைய படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று ஒரு டிவிட் போட்டிருந்தால் இந்தப் போட்டியை தவிர்த்து இருக்கலாம். இது சிவகார்த்திகேயனுக்கும் ஒருவகையில் நல்லதாகவே அமைந்திருக்கும். ஆனால் இப்போது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். அது வருங்காலத்தில் அவருக்குத்தான் ஆபத்தாக முடியும் என இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
புத்தாண்டில் தங்கம் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இன்று ஒரே நாளில் ரூ.320 குறைவு..!