ஞாயிறு, 19 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் குமார், தனது மகள் அனோஷ்காவுடன் கேரளாவில் உள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், குடும்பத்துடன் ஆன்மீக பயணங்களை மேற்கொண்டு வரும் அஜித்தின் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
 
கேரள மாநிலம் பாலக்காடு அருகே அமைந்துள்ள தனது குலதெய்வ கோயிலுக்கு அஜித் மிகவும் எளிமையான முறையில் வருகை தந்தார். ஒரு பக்கம் சினிமா, மறுபக்கம் கார் ரேஸ் எனத் தனது பன்முக திறமைகளால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அஜித், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். 
 
கோயிலில் அவர் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், அனோஷ்கா இவ்வளவு வளர்ந்துவிட்டாரா என ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகின்றனர். எந்தவித ஆரவாரமும் இன்றி கோயிலுக்கு சென்று வழிபட்ட அஜித்தின் எளிமை மீண்டும் ஒருமுறை அனைவரையும் கவர்ந்துள்ளது. 
 
திரைப்படங்களில் நடிப்பு, கார், பைக் ரேஸ் பணிகளுக்கு இடையே கிடைத்துள்ள இந்த இடைவேளையை அவர் குடும்பத்துடன் செலவழித்து வருகிறார்.
 
Edited by Siva