1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Sigma day 2 box office report

Sigma Box Office: சிக்மா 2 ம் நாள் வசூல் நிலவரம்

Sigma Day 2 Box Offic
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள  சிக்மா திரைப்படம்  நேற்று முந்தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், எஸ்.தமன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். நட்சத்திர வாரிசின் முதல் படம் என்பதால், தொடக்கத்திலிருந்தே இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகினர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
மறைந்த தாயின் நினைவாக இயங்கி வரும் நூலகத்தைக் காப்பாற்றவும், தந்தையின் கடன் சுமையை அடைக்கவும் கதாநாயகன் போராடுகிறார். இந்தச் சூழலில் அவரிடம் சிக்கும் ஒரு ரகசிய பென் டிரைவ் மற்றும் அதிலுள்ள விபரங்கள் அவரை அடுத்தடுத்த சிக்கல்களில் தள்ள, கதை ஹெய்ஸ்ட் மற்றும் ஆக்‌‌ஷன் த்ரில்லர் பாணியில் பயணிக்கிறது. சந்தீப் கிஷனின் எதார்த்தமான நடிப்பு, காட்சிகளின் நேர்த்தியான ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் சண்டைக்காட்சிகள் படத்திற்கு வலுசேர்த்துள்ளன. குறிப்பாக, கதாபாத்திர அறிமுகங்களுக்குப் பிறகு முதல் பாதியில் நகரும் விறுவிறுப்பு ரசிகர்களை ஈர்க்கிறது. இருப்பினும், படத்தின் கூடுதல் நீளம்,  லாஜிக் மீறல்கள் மற்றும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை ஆகியவை ரசிகர்களை கவரவில்லை.
 
இந்த கலவையான விமர்சனங்களின் தாக்கம் படத்தின் வசூலிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் Sacnilk தளத்தின் தகவல்படி, முதல் நாளில் இந்தியாவில் ரூ.2.35 கோடி நெட் வசூல் ஈட்டிய இப்படம், இரண்டாவது நாளில் சுமார் 36 சதவீதம் சரிவைச் சந்தித்து ரூ.1.50 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இதன் மூலம் வெளியான முதல் இரண்டு நாட்களில் சிக்மா  திரைப்படம் இந்தியாவில் மொத்தம் ரூ.3.85 கோடி நெட் வசூலையும், தோராயமாக ரூ.4.40 கோடி மொத்த (Gross) வசூலையும் பெற்றுள்ளது.
About Writer
சு. பாலகிருஷ்ணன்
18 ஆண்டுகள் தமிழ் முன்னணி  நாளிதழ்களின் டிஜிட்டல் செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.  அரசியல், பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.  .... Read More
அடுத்த கட்டுரையில்
டோரதி படம் சூப்பர்.. பாராட்டிய மம்முட்டி!.. கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி.. போட்டோஸ் உள்ளே!..