1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. singeetham srinivas rao passed away today

இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்..

singeetham
நடிகர் கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். தெலுங்கு பட இயக்குனர் கே.வி. ரெட்டியிடம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை துவங்கினார். மாயாபஜார் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். 1972ம் வருடம் வெளியான நீதி நிஜாயதி என்கிற படம் மூலம் இயக்குனராக மாறினார்.

தமிழில் திக்கற்ற பார்வதி, இரு நிலவுகள், ராஜ பார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

தேசிய விருதையும் இவர் பெற்றிருக்கிறார். இவருக்கு வயது 95. வயது மூப்பு மற்றும் உடல் நிலை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
Sigma Box Office: சிக்மா 2 ம் நாள் வசூல் நிலவரம்