திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (09:54 IST)

பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை

ஒடியா மொழி நடிகை உசாசி மிஸ்ரா தன்னை ஒரு முதியவரும், அவருடைய 2 மகன்களும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கியதாக போலீசில் புகார் செய்துள்ளார்.

நாட்டில் பெண்கள் மீதான் பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து  இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
 
ஒடியா மொழி நடிகையான உசாசி மிஸ்ரா கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது வழியில் அவரது காரை வழிமறித்த ஒரு முதியவரும் அவரது 2 மகன்களும் நடிகைக்கு பாலியல் சீண்டல் அளித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த நடிகை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.