ஆனாலும் இப்படியா... குழந்தைகளை முன்னாள் காதலியுடன் பழக விட்ட பிரபல நடிகர்!!

Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (08:28 IST)
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை மாதுரி தீக்ஷித்தும் முன் ஒரு காலத்தில் காதலித்து வந்தனர். பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்துவிட்டனர். இப்போது இவர்கள் 22 ஆண்டுகள் கழித்து படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். 
 
வருண் தவான், ஆலியா பட், சோனாக்ஷி சின்ஹா, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோரும் நடித்துள்ள படம் கலன்க். இந்த படத்திற்காகதான் சஞ்சய் தத்தும் மாதுரி தீக்ஷித்தும் சேர்ந்துள்ளனர். இந்த படம் வரும் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.
 
இந்நிலையில் மாதிரியுடன் நடித்தது குறித்து சஞ்சய் தத், 22 ஆண்டுகள் கழித்து மாதுரியுடன் மீண்டும் நடிக்க பதற்றமாக இருந்தது. இருப்பினும் அவருடன் சேர்ந்து நடித்ததில் மகிழ்ச்சி. 
படப்பிடிப்பில் எங்கள் குழந்தைகள் பற்றி நிறைய பேசினோம். நான் என் பிள்ளைகளை செட்டுக்கு வரவழைத்து மாதுரியை சந்திக்க வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், மாதுரி சஞ்சய் தத்தை சார் என்றுதான் அழைக்கிறார். ஏன் என்று கேட்டால் சும்மா என்று பதிலத்துள்ளார். இவர்கள் இருவருக்காவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :